பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு நகையை பறித்துச்சென்ற 2 பேர் கைது
திருப்பூரில் பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு திருப்தி இல்லை என்று கூறி நகையை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுதாவது:-
கூட்டு பாலியல்
திருப்பூர் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன் தினம் போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பெண் ஒருவர் பேசினார். "நான் தனியாக வீட்டில் இருந்த போது எனது வீட்டிற்கு வந்த வாலிபர்கள் 4 பேர் என்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் எனது வீட்டில் இருந்த 3 பவுன் நகை, ரூ.70 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறினார்.
இது குறித்து கட்டுப்பாட்டு அறையிலிருந்து நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த நல்லூர் போலீசார் உடனே விஜயாபுரம் பகுதியில் உள்ள 38 வயதான அந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். போலீசாரிடம் அந்த பெண் நடந்த சம்பவங்கள் குறித்து கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அந்தப்பெண் கூறிய அடையாளங்களை வைத்து சிட்கோ பகுதியை சேர்ந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
திருப்தி இ்ல்லை
இதில் அந்த வாலிபர்கள், சிட்கோ பகுதியை சேர்ந்த முகில் என்ற முகிலேஷ்வரன் (28), வெங்கடேஷ் (26) என்பது தெரிய வந்தது. அவர்களிடம் விசாரணை நடத்தியதில் புகார் கூறிய அந்தப் பெண் கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதியில் விபசாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
கடந்த 25-ந்தேதி இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒரு வாலிபர் அந்தப்பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். உல்லாசம் அனுபவிக்க ரூ.2 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால் உல்லாசம் அனுபவித்ததில் திருப்தியில்லாமல் அந்த வாலிபர் வெளியேறியதாக தெரிகிறது.
2 பேர் கைது
இதுகுறித்து அந்த வாலிபர் தனது நண்பர்களான வெங்கடேஷ், முகிலிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து நேற்றுமுன்தினம் வெங்கடேஷ், முகில் மற்றும் 2 பேர் அந்தப்பெண்ணின் வீட்டிற்கு சென்று இது குறித்து கேட்டுள்ளனர். மேலும் ரூ.2 ஆயிரத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என கூறி அவர்கள் 4 பேரும் அந்தப்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர் பணத்திற்கு பதிலாக அந்தப் பெண், தான் கழுத்தில் அணிந்திருந்த நகையை கழற்றி கொடுத்து விட்டு போலீசாருக்கு போன் செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேஷ், முகில் என்ற முகிலேஷ்வரனை கைது செய்தனர். தலைமறைவான மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.