குடிநீர் பாட்டிலில் மது கலந்து விற்ற 2 பேர் கைது


குடிநீர் பாட்டிலில் மது கலந்து விற்ற 2 பேர் கைது
x

பேட்டையில் குடிநீர் பாட்டிலில் மது கலந்து விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லையை அடுத்த பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தினி மற்றும் போலீசார் பேட்டை ஐ.டி.ஐ. செக்போஸ்ட் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை வழிமறித்து விசாரித்தனர்.

இதில் அவர்கள் சுத்தமல்லி நரசிங்கநல்லூர் ஜீவா நகரை சேர்ந்த கணபதி மகன் ராமகிருஷ்ணன் (வயது 39), சேகர் மகன் மாரி ராஜ் (29) என்பதும், குடிநீர் பாட்டிலில் தண்ணீரில் மது கலந்து விற்றதும் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்த சாக்குப்பையில் 10 இரண்டு லிட்டர் பாட்டில்கள் மற்றும் ஒரு லிட்டர் பாட்டிலில் மது கலந்து வைத்திருந்தனர். அவற்றை போலீசார் பறிமுதல் செய்து, ராமகிருஷ்ணன், மாரி ராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story