வேன் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது


வேன் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 28 Sept 2022 12:15 AM IST (Updated: 28 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மந்தாரக்குப்பத்தில் வேன் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

கடலூர்

மந்தாரக்குப்பம்:

மந்தாரக்குப்பம் அருகே உள்ள மேல்பாப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜவேல் மகன் பிரபாகரன்(வயது 32). வேன் டிரைவர். இவர், நெய்வேலி 29-வது வட்டத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் அரவிந்த்குமார்(27) என்பவரை வேன் ஓட்ட அழைத்துச் சென்றுள்ளார். இதற்காக பிரபாகரன் கூலியில் ரூ.200 குறைத்து அரவிந்த்குமாரிடம் கொடுத்துள்ளார். அதன்பிறகு மீதமுள்ள தொகையை அவர் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அரவிந்த்குமார் தனது நண்பர்களான சின்ன காப்பான்குளத்தை சேர்ந்த ஆகாஷ்(20), தனசேகர்(30) ஆகியோருடன் நேரில் சென்று பணம் கேட்டு பிரபாகரனை தாக்கினர். இதில் காயடைந்த அவர், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்த்குமார், ஆகாஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தனசேகரனை தேடி வருகின்றனர்.


Next Story