குன்னூரில் போலீசை தாக்கிய 2 பேர் கைது
குன்னூரில் போலீசை தாக்கிய 2 பேர் கைது
குன்னூர்
குன்னூர் -கோத்தகிரி சாலையில் வண்டி சோலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஆட்டோ ஒன்றில் அமர்ந்து 3 வாலிபர்கள் மது அருந்தி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த மேல் குன்னூர் போலீஸ் ஒருவர் இதனை தட்டி கேட்டார். இதனால் 3 வாலிபர்களுக்கும் போலீசுக்கும் இடையே தகறாறு ஏற்பட்டது. இதில் 3 வாலிபர்களும் சேர்ந்து போலீசை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த மேல் குன்னூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் 3 வாலிபர்களும் தப்பி ஓடி விட்டனர். இதனை தொடர்ந்து மேல் குன்னூர் போலீசார் தீவிர விசாரணையில், போலீசை தாக்கியது குன்னூர் அருகே லேம்ஸ்ராக் மக்கள் காலனியை சேர்ந்த சரவணன், கரன்சியை சேர்ந்த சுகுமார் மற்றும் உதயகுமார் என்பது தெரிய வந்தது. இதில், சரவணன் மற்றும் சுகுமாரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள உதயகுமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.