லாரி கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது


லாரி கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது
x

லாரி கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

லாரி கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த குருவராஜபேட்டையை சேர்ந்தவர் விஜயன். அவரது மகன் குமார் (வயது 30). இவர், அப்பகுதியில் உள்ள பொன்னியம்மன் கோவில் அருகே மினி லாரியை நிறுத்தி இருந்தார்.

அப்போது சோகனூர் பகுதியை சேர்ந்த யுவராஜ் (23), தனுஷ் (20), பரத் (18) ஆகியோர் குடிபோதையில் லாரியின் கண்ணாடியை உடைத்ததாக தெரிகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து யுவராஜ், தனஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவான பரத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story