தம்பியை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது


தம்பியை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 7 April 2023 12:15 AM IST (Updated: 7 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரியில் சொத்து தகராறில் தம்பியை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி நாடார் மேலத்தெருவைச் சேர்ந்த கிரவன்துரை மகன் குமாரவேல் (வயது 48). அதே தெருவைச் சேர்ந்த இவரது தம்பி விவேகானந்தன் (46). 3-வது தம்பி வெங்கட்ராமன் (40). கூலித்தொழிலாளிகள்.

இவர்களுக்குள் சொத்து பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் குமாரவேலும், விவேகானந்தனும் சேர்ந்து தனது தம்பியான வெங்கட்ராமனை அடித்து-உதைத்து அரிவாளால் கையில் வெட்டி ரத்தக்காயம் ஏற்படுத்தினர். இதுகுறித்து வெங்கட்ராமன் சிவகிரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து குமாரவேல், விவேகானந்தன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினார்.


Next Story