பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 2 பேர் கைது


பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 2 பேர் கைது
x

பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் நீண்ட நாட்களாக விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜெயங்கொண்டம் அண்ணாநகரில் வசிக்கும் பாஸ்கரின் மனைவி சந்திரா (வயது 47) என்பவரது வீட்டுக்கு அடிக்கடி 4 முதல் 5 பெண்களும், சில ஆண்களும் வந்து செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வீட்டில் சந்திரா உள்பட சில பெண்கள் மற்றும் சில ஆண்கள் இருந்தது தெரியவந்துள்ளது. அவர்களை ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது, விபசாரத்தில் ஈடுபட்டது போலீசாருக்கு தெரியவந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் வீரமணி அளித்த புகாரின்பேரில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக சந்திரா மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ஜெயங்கொண்டம் வடக்கு தெருவைச் சேர்ந்த கொளஞ்சியப்பனின் மகன் ரகுபிரசாத் (23) ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story