கூலித்தொழிலாளியிடம் பணம் பறித்த 2 பேர் கைது
கூலித்தொழிலாளியிடம் பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி
திருச்சி ஜெயில் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 22). இவர் காந்திமார்க்கெட் பகுதியில் கூலி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை சுரேஷ் காந்திமார்க்கெட் அருகே உள்ள மீன் மார்கெட் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த பகுதியில் வந்த திருச்சி எடத்தெரு பகுதியை சேர்ந்த ஜாக்கி என்கிற ஜாக்கி ஜான் (27), தாராநல்லூர் பகுதியை சேர்ந்த மாடசாமி (22) ஆகியோர் சுரேசிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000-ஐ பறித்து சென்றனர். இது குறித்து சுரேஷ் காந்திமார்க்கெட் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜாக்கி என்கிற ஜாக்கி ஜான், மாடசாமி ஆகியோரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story