டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.2½ லட்சம் பறித்துச்சென்ற 2 பேர் கைது


டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.2½ லட்சம் பறித்துச்சென்ற 2 பேர் கைது
x

காட்பாடியில் டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.2½ லட்சம் பறித்துச்சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர்

காட்பாடியில் டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.2½ லட்சம் பறித்துச்சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

ரூ.2½ லட்சம் பறிப்பு

வேலூர் மாவட்டம் காட்பாடி மெட்டுக்குளம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவர், திருவலத்தை அடுத்த இ.பி. கூட்ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளாக பணியாற்றி வருகிறார்.

இவர், கடந்த 8-ந்தேதி இரவு பணி முடிந்ததும், அன்று வசூலான ரூ.2 லட்சத்து 57 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் காட்பாடி நோக்கி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த 3 பேர் திடீரென அசோக்குமார் கொண்டு சென்ற ரூ.2 லட்சத்து 57 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

2 பேர் கைது

இதுகுறித்து மேற்பார்வையாளர் அசோக்குமார் திருவலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த சரவணன் என்ற குட்லு (வயது 33), காஞ்சீபுரம் மாவட்டம் சிறு காவேரிப்பாக்கத்தை சேர்ந்த தாமோதரன் (23) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை மீட்டு, 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழிப்பறி வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வழிப்பறியில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசாரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் பாராட்டினார்.


Next Story