பெண்ணிடம் ரூ.2¾ லட்சம் பறித்த 2 பேர் கைது


பெண்ணிடம் ரூ.2¾ லட்சம் பறித்த 2 பேர் கைது
x

திருச்சியில் பெண்ணிடம் ரூ.2¾ லட்சம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பணம் இரட்டிப்பு கும்பலின் கைவரிசையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

திருச்சி

திருச்சியில் பெண்ணிடம் ரூ.2¾ லட்சம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பணம் இரட்டிப்பு கும்பலின் கைவரிசையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

பெண்ணிடம் ரூ.2¾ லட்சம் பறிப்பு

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ரேணுகா (வயது 30). இவர் தனது சகோதரர் குருபரனுடன் திருச்சியில் செல்போன் உதிரிபாகங்கள் வாங்க திருச்செந்தூரில் இருந்து பஸ் ஏறி நேற்று முன்தினம் திருச்சி வந்தனர்.

திருச்சி மத்திய பஸ்நிலையத்தில் பஸ்சில் இருந்து இறங்கிய அவர்கள் வில்லியம்ஸ்சாலையில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்தனர். பின்னர் ஏற்கனவே தாங்கள் வைத்து இருந்த பணத்துடன் சேர்த்து மொத்தமாக ரூ.2¾ லட்சத்தை ஒரு பையில் வைத்து நடந்து சென்றனர்.

அப்போது அங்கு வந்த 2 பேர் அவர்களிடம் பேச்சுகொடுத்து கொண்டே ரேணுகாவிடம் இருந்த பணப்பையை பறித்து காரில் ஏறி தப்பி செல்ல முயன்றனர். இதனால் ரேணுகாவும், குருபரனும் கூச்சல் போட்டனர். சத்தம் கேட்டு ஓடி வந்த ஆட்டோ டிரைவர் ராஜா மற்றும் பொதுமக்கள் அவர்களை விரட்டி பிடித்தனர். இதில் காருக்குள் அமர்ந்து இருந்த 3 பேர் பணத்துடன் தப்பி ஓடினர். 2 பேர் மட்டும் சிக்கி கொண்டனர்.

3 பேருக்கு வலைவீச்சு

விசாரணையில் அவர்கள், திண்டுக்கல்லை சேர்ந்த முகமதுஅன்சாரி, மதுரையை சேர்ந்த ஜெகநாதன் என்பது தெரியவந்தது. பின்னர் பிடிபட்ட 2 பேரையும் காருடன் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் முகமதுஅன்சாரி மீது ஏற்கனவே வழிப்பறி வழக்கு உள்ளது. இந்த கும்பல் பல்வேறு நபர்களிடம் பணத்தை இரட்டிப்பாக்கி கொடுப்பதாக கூறி மோசடிகளில் ஈடுபட்டு வருபவர்களா? இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

மேலும், இந்த சம்பவத்திலும் பணம் இரட்டிப்பாக்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி வழிப்பறியை அரங்கேற்றினார்களா? எனவும் தெரியவில்லை. இந்த சம்பவத்தில் பணத்துடன் தப்பி ஓடிய 3 பேரை வலைவீசி தேடி வருகிறோம் என்றும், அவர்களை பிடித்தால் தான் இந்த வழிப்பறி சம்பவத்தின் உண்மையான காரணம் என்ன?, இதன் பின்புலத்தில் யாரெல்லாம் உள்ளனர் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story