கூலித்தொழிலாளியை பாட்டிலால் தாக்கிய 2 பேர் கைது


கூலித்தொழிலாளியை பாட்டிலால் தாக்கிய 2 பேர் கைது
x

கூலித்தொழிலாளியை பாட்டிலால் தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வெங்கங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 28). கூலித் தொழிலாளியான இவர் நேற்று சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது மகேந்திரனை சிந்தாமணி வெனிஸ் தெரு, காந்திநகரை சேர்ந்த குமார் (33), வாணபட்டறை தெருவை சேர்ந்த சீனி என்கிற சீனிவாசன் (24) ஆகியோர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.


Next Story