வடலூரில் வாலிபரை கடத்தி தாக்கிய 2 பேர் கைது


வடலூரில் வாலிபரை கடத்தி தாக்கிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 13 Oct 2023 12:15 AM IST (Updated: 13 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வடலூரில் வாலிபரை கடத்தி தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

கடலூர்

வடலூர்,

வடலூர் காந்திநகரை சேர்ந்தவர் ராஜராஜசோழன் (வயது 32). இவர் புவனகிரி கரைமேடு கிராமத்தை சேர்ந்த பாரத் என்பவருக்கு ரூ.70 ஆயிரம் கடன் கொடுக்க வேண்டி இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று ராஜராஜசோழன், வடலூர் -சென்னை சாலையில் உள்ள கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாரத்தின் ஆதரவாளர்களான வடலூர் தென்குத்து கிராமத்தை ராமமூர்த்தி மகன் மணிகண்டன் (44), ராமன் மகன் ராம்குமார் (38) மற்றும் கனகவேல் உள்பட 4 பேர் சேர்ந்து, மோட்டார் சைக்கிளில் ராஜராஜனை கடத்தி சென்றுள்ளனர். பின்னர் ஆபத்தாரணபுரம் கைகாட்டி அருகில் உள்ள ஒர்க்ஷாப்பில் இறக்கிவிட்டு அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். மேலும் வெற்றுப்பத்திரத்தில் கையெழுத்து வாங்கி அவரை அங்கேயே விட்டுச்சென்றதாக தெரிகிறது. இதில் காயமடைந்த ராஜராஜசோழன் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின்பேரில் கனகவேல் உள்பட 4 பேர் மீது வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், ராம்குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.


Next Story