கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையிலான போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குளால்பாடி பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்தனர். அவர்களிடம் போலீசார் சோதனை நடத்தியதில் கஞ்சா வைத்தமிருந்ததை கண்டுபிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலை பழைய மல்லவாடியை சேர்ந்த ராமராஜன் (வயது 31), போளூர் அல்லி நகர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (38) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Next Story