கஞ்சா விற்ற 2 பேர் கைது
கூத்தாநல்லூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது
திருவாரூர்
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் நேற்று கூத்தாநல்லூர், கோரையாறு, பொதக்குடி, சித்தாம்பூர், வாழச்சேரி, லெட்சுமாங்குடி, அதங்குடி உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதங்குடி பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் அதங்குடி, சறுக்கக்கரை தெருவைச் சேர்ந்த விஜய் (வயது 20), தமிழரசன் (19) என்பதும், அவர்கள் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விஜய், தமிழரசன் 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story