நாகர்கோவிலில் சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது


நாகர்கோவிலில் சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது
x

நாகர்கோவிலில் சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா விற்பனை

நாகர்கோவில் பள்ளிவிளை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வடசோி போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக 3 பேர் சுற்றித்திரிந்தனர். அவர்களை விசாரணைக்காக போலீசார் அழைத்தனர். அப்போது ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மீதமுள்ள 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் வாத்தியார்விளையை சேர்ந்த கணேஷ் (வயது 20) என்பதும், மற்றொருவர் 17 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் 2 பேரும் அப்பகுதியில் கஞ்சா விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. சிறுவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story