Normal
சாராயம் விற்ற 2 பேர் கைது
சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்,
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் தேவபாண்டலம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த ரவி(வயது 45) என்பவர் அங்குள்ள ஏரிக்கரை அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைப்பார்த்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் ரவியை கைது செய்ததோடு அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். அதேபோல் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள புதுப்பட்டு பகுதியில் வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வீட்டின் பின்பகுதியில் சாராயம் விற்பனைசெய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த காமராஜ்(55) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 15 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story