போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது
திருச்சி
திருவெறும்பூர்,ஜூன்.15-
திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் சப்பானி கோவில் தெரு பகுதியில் உள்ள வயல் பகுதியில் போதை மருந்து ஊசி, மாத்திரைகள் விற்கப்படுவதாக காட்டூர் கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன் திருவெறும்பூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அரியமங்கலம் காமராஜ் நகர் அப்துல் கலாம் ஆசாத் தெருவைச் சேர்ந்த சேட்டு என்ற ரஷீத் (20), அமிரிதின் (22) ஆகியோர் போதை மருந்து ஊசி மற்றும் மாத்திரைகளை ரூ.250 முதல் ரூ.300-க்கு விற்றதது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து போதை மாத்திரைகள், ஊசிகளை பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story