சாராயம் கடத்திய 2 பேர் கைது


சாராயம் கடத்திய 2 பேர் கைது
x

ஆம்பூர் அருகே சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மோட்டார்சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

ஆம்பூர்

ஆம்பூர் அருகே சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மோட்டார்சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆம்பூரை அடுத்த மாச்சம்பட்டு அருகில் மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் நேற்று முன்தினம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். இருவரும் பேரணாம்பட்டை அடுத்த கோட்டைசேரி பகுதியைச் சேர்ந்த மணி (வயது 22), திருமூர்த்தி (34) என்றும், மோட்டார்சைக்கிளில் சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து போலீசார் அவர்களிடம் இருந்து 55 லிட்டர் சாராயம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story