ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது


ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
x

நாங்குநேரி அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி தலைமையில் பல்வேறு இடங்களில் தொடர் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று நாங்குநேரி அருகே உள்ள கூந்தன்குளம் பகுதியில் காரில் ரேஷன் அரிசி கடத்தி வந்ததாக பட்டர்பிளைபுதூரை சேர்ந்த ராமசாமி (வயது 41), தென்மலையை சேர்ந்த சுடலைக்கண்ணு (60) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கார் மற்றும் 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story