ஆசிரியரிடம் தங்க சங்கிலி பறித்த 2 பேர் கைது


ஆசிரியரிடம் தங்க சங்கிலி பறித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 27 April 2023 1:00 AM IST (Updated: 27 April 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

கன்னங்குறிச்சி:-

சேலம் சின்னத்திருப்பதி மாருதி நகரில் வசிப்பவர் அருள் சாமுவேல். தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்து வருகிறார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சின்னத்திருப்பதி கோகுல் நகர் பகுதியில் நடைபயிற்சி சென்றார். அப்போது 2 பேர், சாமுவேல் கழுத்தில் அணிந்து இருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நகை பறிப்பு தொடர்பாக கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த யாரப் (25), ரமேஷ் (28) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தங்க சங்கிலி மீட்கப்பட்டது.


Next Story