கேமரா திருடிய 2 பேர் கைது


தினத்தந்தி 10 Feb 2023 12:15 AM IST (Updated: 10 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கேமரா திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி தாளமுத்துநகர் ஆரோக்கியபுரத்தை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் வேல்முருகன் (வயது 46). இவர் தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணிநகர் பகுதியில் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 09.12.2022 அன்று இரவு இவரது ஜெராக்ஸ் கடை கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த கேமராவை திருடிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து வேல்முருகன் அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இது தொடர்பாக தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் தலைமையில் போலீஸ் ஏட்டு மாணிக்கராஜ், போலீஸ்காரர்கள் மகாலிங்கம், சாமுவேல், முத்துப்பாண்டி, செந்தில்குமார், திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் திருட்டு சம்பவத்தில் தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த அமல்ராஜ் மகன் விமல்ராஜ் (19) மற்றும் தூத்துக்குடி திரேஸ்புரம் சங்குகுளி காலனியைச் சேர்ந்த கணேசன் மகன் கதிரவன் (19) ஆகிய 2 பேரும் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. உடனடியாக தனிப்படை போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரம் மதிப்பிலான கேமிராவையும் பறிமுதல் செய்தனர்.


Next Story