(செய்தி சிதறல்) கார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது


(செய்தி சிதறல்) கார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது
x

கார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

கார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

செல்போன் பறிப்பு

திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 38). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள நெல் பேட்டை மதுக்கடை பாரில் நின்று கொண்டிருந்த போது 2 வாலிபர்கள் அவரிடம் இருந்து செல்போன் பறித்து சென்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போனை பறித்து சென்ற வரகனேரி பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (27), சரவணகுமார் (32) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் இருவர் மீதும், 8 குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

டிரைவரை தாக்கிய வாலிபர் கைது

*புதுக்கோட்டையில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு பஸ் ஒன்று மணப்பாறை வழியாக சென்று கொண்டிருந்தது. பஸ்சை ராஜாளிப்பட்டியை சேர்ந்த பாலசுப்ரமணியன் (46) என்பவர் ஓட்டினார். பஸ் மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்த போது மணப்பாறை அண்ணாவி நகரை சேர்ந்த அப்பாஸ் (35) என்பவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அப்போது, பஸ் டிரைவர் தொடர்ந்து ஹாரன் எழுப்பினார். இதை தட்டிகேட்டபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பாஸ் பஸ் டிரைவரை தாக்கினார். இது குறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பாசை கைது செய்தனர்.

கஞ்சா விற்றவர்கள் கைது

* திருச்சி எடைமலைப்பட்டிபுதூர் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி (68), அதே பகுதியில் கஞ்சா விற்றதாகவும், தாராநல்லூர் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (20). காந்தி மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்றதாகவும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

பஸ்சில் நடனம்

* திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் (46) இவர் அரசு டிரைவராக பணியாற்றி வருகிறார் . இவர் சம்பவத்தன்று சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து உறையூர் பகுதிக்கு அரசு பஸ்சை ஓட்டி வந்தார். அப்போது, எதிரில் கோவில் நிகழ்ச்சிக்காக பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். சுப்பிரமணியம் பஸ்சை நிறுத்தி உள்ளார். இதனிடையே 2 வாலிபர்கள் பஸ் மீது ஏறி நடனம் ஆடினர். இது குறித்து உறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2 வாலிபர்களை தேடி வருகின்றனர்.


Next Story