மருத்துவ மாணவர்களிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது


மருத்துவ மாணவர்களிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது
x

நெல்லையில் மருத்துவ மாணவர்களிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் தங்கும் விடுதியில் 3 மாணவர்களிடம் ரூ.75 ஆயிரம் மதிப்பிலான 3 செல்போன்கள் காணாமல் போனது. இதுதொடர்பாக மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகரன், சப்-இன்ஸ்பெக்டர் அன்னராஜா ஆகியோர் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்போன் திருடியவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மஞ்சன் (வயது 30), முனியப்பன் (30) ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள் மீட்கப்பட்டன.


Next Story