நெசவு தொழிலாளி வீட்டில் திருடிய 2 பேர் கைது


நெசவு தொழிலாளி வீட்டில் திருடிய 2 பேர் கைது
x

நெசவுத்தொழிலாளி வீட்டில் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்தவர் கல்பனா. நெசவு தொழிலாளி. கடந்த மாதம் இவருடைய வீட்டில் இருந்த 5 பவுன் நகைகள், ரூ.5 ஆயிரம் திருடு போனது. இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் தலைமையிலான போலீசார், பாரதிபுரம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 19) மற்றும் 17 வயது சிறுவன் என்பதும், கல்பனா வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story