பெண்களிடம் தங்கச்சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது 11½ பவுன் நகை, 3 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு


பெண்களிடம் தங்கச்சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது  11½ பவுன் நகை, 3 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு
x

குமரி மாவட்டத்தில் பெண்களிடம் தங்கச்சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 11½ பவுன் நகை மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன.

கன்னியாகுமரி

தக்கலை:

குமரி மாவட்டத்தில் பெண்களிடம் தங்கச்சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 11½ பவுன் நகை மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

தங்கச்சங்கிலி பறிப்பு

தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் தனிப்படை போலீசார் நேற்று காலை 7 மணியளவில் அழகிய மண்டபத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெளிமாவட்ட பதிவெண் கொண்ட மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.

அந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்கள். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் புளியங்குடி, வேத கோவில்தெருவை சேர்ந்த சந்திரன் மகன் நவீன் ஆன்டணிராஜ் (வயது 24) டிப்ளமோ படித்தவர் என்றும், இன்னொருவர் கருத்த பிள்ளையூர் பகுதியை சேர்ந்த ஜஸ்டின் துரை மகன் வினித் (20) 9-ம் வகுப்பு படித்தவர் என்பதும், அவர்கள் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

2 பேர் கைது

மேலும் இருவரும் தக்கலை அருகே அப்பட்டு விளை பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து இருந்த பெண்ணிடம் வழி கேட்பதுபோல் பேசி 3 பவுன் தங்கசங்கிலியையும் மற்றும் குலசேகரம், திருவட்டார் போலீஸ் நிலைய பகுதிகளிலும் பெண்களிடம் தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

மேலும் அவர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்டால் போலீசில் சிக்கி விடுவோம் என்று வெவ்வேறு மோட்டார் சைக்கிள்களில் சென்று கைவரிசை காட்டி வந்துள்ளனர். இதற்காக அவர்கள் திருமங்கலத்்தில் 2 மோட்டார் சைக்கிள்களையும், நெல்லையில் ஒரு மோட்டார் சைக்கிளையும் திருடியதும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 11½ பவுன் நகை மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன. பின்னர் அவர்கள் இருவரும் பத்மநாபபுரம் கோர்ட்டில் ஆஜர்படுதப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story