கட்டுமான நிறுவனத்தில் இரும்பு கம்பிகள் திருடிய 2 பேர் கைது


கட்டுமான நிறுவனத்தில் இரும்பு கம்பிகள் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 2 Feb 2023 12:15 AM IST (Updated: 2 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் கட்டுமான நிறுவனத்தில் இரும்பு கம்பிகள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் கட்டுமான நிறுவனத்தில் இரும்பு கம்பிகள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இரும்பு கம்பிகள் திருட்டு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடம் ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் முருகன் மகன் சாமிநாதன் (வயது 32). இவர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் பொறியியல் துறை கட்டுமான நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். மயிலாடுதுறை லட்சுமிபுரத்தில் உள்ள தொழில் கூடத்தில் இருந்து கட்டுமான கம்பிகள் காணாமல் போய் உள்ளன.

சம்பவத்தன்று கட்டுமான நிறுவனத்தின் அருகில் வாய்க்கால் பகுதியில் மறைத்து வைத்திருந்த கம்பிகளை கட்டுமான நிறுவனத்தில் கம்பி பிட்டராக வேலை பார்த்து வந்த 2 பேர் விற்பனை செய்வதற்காக எடுத்து சென்றுள்ளனர். இதனை கண்ட டிரைவர் நிஷார் உடனடியாக சாமிநாதனிடம் தெரிவித்தார்.

2 பேர் கைது

இதுதொடர்பாக சாமிநாதன் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் அதே கட்டுமான நிறுவனத்தில் கம்பி பிட்டராக வேலை பார்த்து வந்த மயிலாடுதுறை அருகே மறையூர் தெற்கு தெருவை சேர்ந்த சவுந்தர்ராஜன் மகன் கலையரசன் (35), அதே பகுதியைச்சேர்ந்த கோவங்குடி ராஜா மகன் ராஜ்கிரன் (28) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கட்டுமான நிறுவனத்தில் இருந்து கம்பிகளை திருடி விற்பனைக்காக எடுத்துச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story