மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
x

ேமாட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை புதுஅம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 42). இவர் கடந்த 14-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் அம்பை காசி விஸ்வநாதர் கோவில் அருகிலுள்ள தாமிரபரணி ஆற்றங்கரையில் குளிக்க சென்றார். மோட்டார் சைக்கிளை படித்துறை அருகே நிறுத்திவிட்டு குளிக்க சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து சீனிவாசன் அம்பை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் நெல்லை தாழையூத்து சங்கர் நகரை சேர்ந்த நாகராஜன் (24), மேலப்பாளையத்தை சேர்ந்த முகமது அபுபக்கர் சித்திக் (21) ஆகிய 2 பேரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற தெரியவந்தது. இதையடுத்து போலீசார், 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story