போலீசாரை மிரட்டிய 2 பேர் கைது


போலீசாரை மிரட்டிய 2 பேர் கைது
x

நெல்லையில் போலீசாரை மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு சி.என்.கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 51). இவர் சந்திப்பு பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தபோது, அங்கு நெல்லை சந்திப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜனகன் மற்றும் போலீசார் விசாரிக்க சென்றனர். அப்போது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுக்கும் வகையில் அவர் இரும்பு கம்பியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஜனகன் சந்திப்பு போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ராஜ்குமாரை கைது செய்தார். மேலும் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்ற விட்டிலாபுரத்தை சேர்ந்த அருணாசலத்தையும் கைது செய்தார்.


Next Story