சாமி சிலையை சேதப்படுத்திய 2 பேர் கைது
வீரவநல்லூர் அருகே சாமி சிலையை சேதப்படுத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேரன்மாதேவி:
வீரவநல்லூர் அருகே உள்ள புதுக்குடி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 50). இவர் அதே பகுதியில் கிருஷ்ணசாமி என்பவரது தோட்டத்தில் உள்ள சிற்பக்கலை கூடத்தில் சாமி சிலைகள் செதுக்கி விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் காருக்குறிச்சியை சேர்ந்த அய்யப்பன் (22), இசக்கிப்பாண்டி என்ற சிவா (19) ஆகிய இருவரும் சிலை செதுக்கும் இடத்திற்கு வந்து இடையூறாக இருந்ததால் கண்ணன் கண்டித்துள்ளார். இந்த முன்விரோதம் காரணமாக சிற்பக்கலை கூடத்தில் கண்ணன் செதுக்கி வைத்திருந்த சுமார் ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள துவார காளி கற்சிலையை அய்யப்பன், இசக்கிப்பாண்டி ஆகிய இருவரும் சேர்ந்து உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கண்ணன் வீரவநல்லூர் போலீசில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் காவுராஜன் வழக்குப்பதிவு செய்தார். போலீசார் விசாரணை நடத்தி அய்யப்பன், இசக்கிப்பாண்டி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.