பயங்கர ஆயுதங்களுடன் 2 பேர் கைது


பயங்கர ஆயுதங்களுடன் 2 பேர் கைது
x

நெல்லையில் பயங்கர ஆயுதங்களுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை மாநகர பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று இரவு பாளையங்கோட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களை சோதனை செய்தபோது அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் வைத்து இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் பாளையங்கோட்டையை சேர்ந்த நல்லமுத்து மகன் சுபாஷ் (வயது 23), இசக்கி மகன் காவேரி உடையார் (26) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.


Next Story