ஆடு திருடிய 2 பேர் கைது
ஆடு திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அம்மாப்பேட்டை அருகே வண்டாண்டி கிராமம், ஒத்த தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் மனைவி செல்வி (வயது40). சம்பவத்தன்று இவருக்கு சொந்தமான ஆடு அந்த பகுதி வடவாற்றுக்கரையில் மேய்ந்து கொண்டு இருந்தது. அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் மேய்ந்து கொண்டு இருந்த ஆட்டை திருடிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர். அவர்கள் சென்ற வாகனம் பூண்டி அருகே சென்ற போது எதிரே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அம்மாப்பேட்டை போலீசார் மோட்டார் சைக்கிளை வழிமறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் இருவரும் விளார் ரோடு, அண்ணா நகர், பர்மா காலனியை சேர்ந்த ரவி மகன் பாலகிருஷ்ணன் (28), பர்மா காலனியை சேர்ந்த வேலு மகன் முத்துக்குமார் (23) என்பதும், இருவரும் ஆட்டை திருடி வந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ஆடு மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.