வெட்டுக்காடு கிராமத்தில் மின் கம்பி அறுந்து விழுந்து 2 காளைகள் சாவு
வெட்டுக்காடு கிராமத்தில் மின் கம்பி அறுந்து விழுந்து 2 காளைகள் செத்தன.
நாமக்கல்
சேந்தமங்கலம்
சேந்தமங்கலம் அருகே வெட்டுக்காடு கிராமத்தில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் நேற்று மஞ்சள் விதை நடவு செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மேலே சென்ற மின் கம்பிகள் திடீரென்று அறுந்து விழுந்தது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 காளைகள் மீது விழுந்ததில் அவைகள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் தோட்ட உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து அந்த 2 காளைகளும் அந்த தோட்டத்தின் அருகில் அடக்கம் செய்யப்பட்டது. இறந்து போன 2 காளைகளின் மதிப்பு ரூ.1 லட்சம் என தெரிய வருகிறது. இந்த சம்பவத்தால் நேற்று வெட்டுக்காடு கிராமத்தில் பரபரப்பு காணப்பட்டது.
Related Tags :
Next Story