திண்டிவனத்தில்அடுத்தடுத்து 2 கார்கள் மோதல்
திண்டிவனத்தில் அடுத்தடுத்து 2 கார்கள் மோதி விபத்துக்குள்ளானது.
விழுப்புரம்
திண்டிவனம்,
சென்னையை சேர்ந்தவர் மோகன் (வயது 35). இவர் சென்னையில் இருந்து திருச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திண்டிவனம் புறவழிச்சாலை கர்ணாதூர் அருகே சென்ற போது, முன்னால் சென்ற லாரியை முந்தி சென்றார்.
அதில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அப்போது அந்த காருக்கு பின்னால் வந்த மற்றொரு காரும் விபத்தில் சிக்கியது. அடுத்தடுத்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து திண்டிவனம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story