2 கார்களின் கண்ணாடி உடைப்பு


2 கார்களின் கண்ணாடி உடைப்பு
x

வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த 2 கார்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து ேபாலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்

பட்டிவீரன்பட்டி 4-வது வார்டு மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சவுந்தர். இவர், வத்தலக்குண்டுவில் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவர், சித்தரேவு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு சொந்தமான கார்களை வழக்கம்போல் தங்களது வீடுகளின் முன்பு நிறுத்தியிருந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இவர்களது கார் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்துவிட்டு சென்று விட்டனர். காலையில் எழுந்து பார்த்தபோது கார்களில் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story