பட்டாசு வெடித்து 2 சிறுவர்கள் படுகாயம்


பட்டாசு வெடித்து 2 சிறுவர்கள் படுகாயம்
x

குடியாத்தத்தில் பட்டாசு வெடித்து சிறுவர், சிறுமி படுகாயம் அடைந்தனர்.

வேலூர்

குடியாத்தம் நெல்லூர்பேட்டை வடக்கு மாட வீதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மகன் அகிலேஷ் (வயது 12), 7-ம் வகுப்பு படித்து வருகிறான். சன்னதி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் அனுசுயா (11), 6-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் கோவிலுக்கு சென்றுவிட்டு இருவரும் வீட்டிற்கு திரும்பி கொண்டிருக்கும் போது சாலையின் ஓரத்தில் கயிறுடன் உருண்டை போல் இருந்த பட்டாசை எடுத்து உள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக வெடித்துள்ளது. இதில் அகிலேஷ், அனுசியா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அகிலேஷ் குடியாத்தம் அரசு மருத்துவமனையிலும், அனுசியா வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story