ரூ.17 லட்சத்தில் 2 வகுப்பறை கட்டிடம்


ரூ.17 லட்சத்தில் 2 வகுப்பறை கட்டிடம்
x

ரூ.17 லட்சத்தில் 2 வகுப்பறை கட்டிடம்

மயிலாடுதுறை

திருவெண்காடு அருகே மணிக்கிராமம் அரசினர் நடுநிலைப்பள்ளியில் ரூ. 17 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சிகள் சரவணன், ஒன்றிய கவுன்சிலர் பஞ்சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் முல்லைவேந்தன் வரவேற்றார். இதில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார். இதில் மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், ஒன்றிய உதவி பொறியாளர்கள் தெய்வானை, சிவக்குமார் மற்றும் தி.மு.க. ஒன்றிய நிர்வாகிகள், பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை ராஜம் நன்றி கூறினார். தொடர்ந்து பெருந்தோட்டம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடையை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் மோகனா ஜெய்சங்கர், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒப்பந்ததாரர் ரவி நன்றி கூறினார்.


Next Story