வைக்கோல் கட்டுகளுக்குள் பதுக்கப்பட்ட 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்


வைக்கோல் கட்டுகளுக்குள் பதுக்கப்பட்ட 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 9 Feb 2023 1:00 AM IST (Updated: 9 Feb 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

ஏற்காடு:-

ஏற்காடு அருகே வைக்கோல் கட்டுகளுக்குள் பதுக்கப்பட்ட 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

2 நாட்டு துப்பாக்கிகள்

ஏற்காடு அருகே பெரியேரிக்காடு மலைக்கிராமத்தில் சுந்தரராஜன் என்பவர் நாட்டு துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ஏற்காடு போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை அறிந்ததும், சுந்தரராஜன் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சுந்தரராஜன் வீடு மற்றும் வீட்டின் அருகே வைக்கப்பட்டிருந்த வைக்ேகால் போர் ஆகிய இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

வைக்கோல் கட்டுகளுக்குள்...

இதில் வைக்கோல் கட்டுகளுக்கு நடுவில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 2 நாட்டு துப்பாக்கிகள், 200 கிராம் கரி மருந்து மற்றும் 300 கிராம் பால்ரஸ் குண்டுகளை போலீசார் கைப்பற்றினர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஏற்காடு போலீசார், தலைமறைவான சுந்தரராஜனை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story