விவசாய நிலத்தில் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல்


விவசாய நிலத்தில் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 11 May 2023 12:15 AM IST (Updated: 11 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலையில் விவசாய நிலத்தில் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள தும்புராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளையன் மகன் பூச்சி (வயது 32). அதே ஊரில் உள்ள இவருடைய விவசாய நிலத்தில் நாட்டுத் துப்பாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், கரியாலூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், ராமலிங்கம் மற்றும் போலீசார் பூச்சிக்கு சொந்தமான விவசாய நிலத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சட்டத்தை மீறி 2 நாட்டுத்துப்பாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நாட்டுத்துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இது தொடர்பாக பூச்சியை கரியாலூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story