உசிலம்பட்டி அருகே மின்னல் தாக்கி 2 மாடுகள் சாவு
உசிலம்பட்டி அருகே மின்னல் தாக்கி 2 மாடுகள் இறந்தன
மதுரை
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான தொட்டப்பநாயக்கனூர், உத்தப்பநாயக்கனூர், சேடபட்டி, எழுமலை, செல்லம்பட்டி, கருமாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கனமழை கொட்டித் தீர்த்தது, இதில் உசிலம்பட்டி அருகே வளையபட்டியைச் சேர்ந்த காசி என்பவர் தனக்கு சொந்தமான 2 பசுமாடுகளை மேய்ச்சலுக்காக வயல்வெளியில் கட்டி வைத்திருந்தார். இந்த நிலையில் திடீரென மின்னல் தாக்கியதில் 2 பசுமாடுகளும் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தன. இது குறித்து தகவறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story