ரூ.2½ கோடியில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம்-யூனியன் தலைவர் சொர்ணம் அசோகன் தகவல்


ரூ.2½ கோடியில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம்-யூனியன் தலைவர் சொர்ணம் அசோகன் தகவல்
x
தினத்தந்தி 8 Jan 2023 12:23 AM IST (Updated: 8 Jan 2023 12:27 AM IST)
t-max-icont-min-icon

ரூ.2½ ேகாடியில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் அமைக்கப்படும் என்று யூனியன் தலைவர் சொர்ணம் அசோகன் தெரிவித்தார்.

சிவகங்கை

காரைக்குடி

ரூ.2½ ேகாடியில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் அமைக்கப்படும் என்று யூனியன் தலைவர் சொர்ணம் அசோகன் தெரிவித்தார்.

ஒன்றிய குழு கூட்டம்

கல்லல் ஒன்றிய குழு கூட்டம் தலைவர் சொர்ணம் அசோகன் தலைமையில் நடந்தது. துணை தலைவர் நாராயணன் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரம் மற்றும் அதிகாரிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

மருது பாண்டியன்:- ஆன்மிக தலமான குன்றக்குடியில் சுகாதார வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

முத்தழகு:- ஒன்றிய பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கண்மாய் மடைகள், கலுங்குகளை சீரமைக்க வேண்டும்.

அப்தாஹிர்:- திடீர் நோய்களால் கால்நடைகள் பாதிக்கப்பட்டு இறப்பது தொடர்கிறது. எனவே கால்நடை மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். குளியல் தொட்டிகளை குப்பை தொட்டிகளாக மாற்றுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பத்திரப்பதிவு அலுவலகம்

சங்கீதா:- கல்லலில் பத்திரப்பதிவு அலுவலகம் இயங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பட்டணம்பட்டியில் குறைந்த மின்அழுத்தம் காரணமாக மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகின்றன. எனவே டிரான்ஸ்பார்மர்களை அமைக்க வேண்டும். தேவபட்டு மஞ்சுவிரட்டு நடப்பதற்கு முன் சாலையை சீரமைக்க வேண்டும்.

ஆரோக்கியம்:- வளர்ச்சி திட்ட பணிகளில் பாரபட்சமின்றி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

சங்கு உதயகுமார்:- மரிங்கிப்பட்டி ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் வேண்டி பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. ஒன்றிய கூட்டத்தில் அனைத்து துறைகளை சேர்ந்த அலுவலர்களும் கலந்து கொள்வதை கட்டாயமாக்க வேண்டும்.

துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரம்:- ரேஷன் கடை கட்டிட பணிகள் விரைவில் தொடங்கும்.

துணை தலைவர் நாராயணன்:- கண்டரமாணிக்கத்திலிருந்து திருக்கோஷ்டியூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையை சீரமைப்பு செய்ய பரிந்துரை செய்ய வேண்டும்.

பிரேமா:- மணப்பட்டி அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் வேண்டும். ஆர்.எஸ்.பதி தைல மரங்களை வெட்டும்போது அதன் கழிவு பட்டைகள் வரத்து கால்வாய்களை அடைத்த நிலையில் உள்ளன. அதனை அப்புறப்படுத்த வேண்டும்.

ரூ.2½ கோடியில்

தலைவர் சொர்ணம் அசோகன்:- கல்லல் ஊராட்சி ஒன்றிய விவசாயிகளின் நலன் கருதி ஒன்றிய அலுவலக வளாகத்திலேயே ரூ.2½ கோடி மதிப்பீட்டில் வேளாண் துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்கப்பட உள்ளது. வனத்துறைக்கு சொந்தமான பகுதிகளின் வழியாக அமைக்கப்பட வேண்டிய சாலைகளுக்கான அனுமதி நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்துள்ளது. தம்பிபுரம், துளாவூர், கீழப்பூங்குடி, மேலப்பூங்குடி, கொடுங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு விவாதங்கள் நடந்தன.


Next Story