மலைப்பாதையில் ரூ.2¼ கோடியில் சாலை சீரமைக்கும் பணி


மலைப்பாதையில் ரூ.2¼ கோடியில் சாலை சீரமைக்கும் பணி
x

வாணியம்பாடி அருகே கன மழையால் சரிந்து விழுந்த மலைப்பாதையில் ரூ.2¼ கோடி செலவில் சாலை சீரமைக்கும் பணி தொடங்கியது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே கன மழையால் சரிந்து விழுந்த மலைப்பாதையில் ரூ.2¼ கோடி செலவில் சாலை சீரமைக்கும் பணி தொடங்கியது.

நிலச்சரிவு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த வெலதிகமாணிபெண்டா மலை சாலை கடந்த 1 ஆண்டுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு சாலை மிகவும் பாதிக்கப்பட்டது.

இதனால் மலை பாதையான இந்த பாதையில் 2 மாதங்களுக்கு மேலாக போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. அதன் பின்பு நெடுஞ்சாலைத்துறையால் தற்காலிக சாலை அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் உயர் அதிகாரிகள், பல்வேறு துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜி, செந்தில்குமார், வில்வநாதன் உள்ளிட்டோரும் அதிகாரிகளிடம், உடனடியாக இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

சீரமைக்கும் பணி

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட மலைச்சாலைக்கு வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அனுமதி அளிக்கப்பட்டு ரூ.2¼ கோடியில் சாலை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அந்த இடத்தை கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டார்.

முன்னதாக அந்த பகுதியில் உள்ள நடுமலை பொன்னியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அப்போது ஆலங்காயம் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் எம்.கோபால் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பாரதிதாசன், குமார், கோவிந்தசாமி, ராமசாமி, சிவானந்தம் உள்ளிட்ட பலர் இருந்தனர்.


Next Story