158 பயனாளிகளுக்கு ரூ.2¼ கோடியில் நலத்திட்ட உதவி
நாகையில் 158 பயனாளிகளுக்கு ரூ.2¼ கோடியில் நலத்திட்ட உதவியை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.
நாகையில் 158 பயனாளிகளுக்கு ரூ.2¼ கோடியில் நலத்திட்ட உதவியை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
நாகை கலெக்டர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன், தாட்கோ கழக தலைவர் மதிவாணன், எம்.எல்.ஏ.க்கள் முகமது ஷா நவாஸ், நாகை மாலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு 158 பயனாளிகளுக்கு ரூ.2 ேகாடியே 30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதில் கூடுதல் கலெக்டர் பிரதிவிராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, நகர மன்ற தலைவர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நியாய விலை கடைகள் திறப்பு
முன்னதாக வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் ரூ.43.77 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடைகளை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.
இதேபோல் தலைஞாயிறு அருகே ஆலங்குடி பகுதியில் வெண்மணச்சேரி வடபாதி வாய்க்காலில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.