ரூ.2¾ கோடியில் இந்துசமய அறநிலையத்துறை அலுவலகம்
வேலூரில் ரூ.2¾ கோடியில் இந்துசமய அறநிலையத்துறை அலுவலகம் கட்ட காணொலி காட்சியில் முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
வேலூர் மாவட்டத்தில் இந்துசமய அறநிலையத்துறை இணை கமிஷனர் மற்றும் உதவி கமிஷனர் அலுவலகங்கள் பல ஆண்டுகளாக வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில் வேலூர் அண்ணாசாலையில் ஊரீசு கல்லூரியின் எதிரே இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான காலியிடத்தில் இணை கமிஷனர், உதவி கமிஷனர் அலுவலகங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டன.
இதற்காக ரூ.2 கோடியே 96 லட்சம் ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த அலுவலகத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது.
சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
அதைத்தொடர்ந்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு மேயர் சுஜாதா ஆகியோர் குத்துவிளக்கேற்றி, கட்டிடத்துக்கான அடிக்கல்லை எடுத்து கொடுத்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
இதில் இந்துசமய அறநிலையத்துறை வேலூர் மாவட்ட தலைவர் அசோகன், இணை கமிஷனர் லட்சுமணன், உதவி கமிஷனர் நித்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.