பவானியில் 2 நாட்கள்மாவட்ட அளவிலான வளையப்பந்து போட்டி
மாவட்ட அளவிலான வளையப்பந்து போட்டி பவானியில் 2 நாட்கள் நடக்கிறது
ஈரோடு
ஈரோடு வளையப்பந்து கழகம் சார்பில் வருகிற ஜூன் மாதம் 10 மற்றும் 11-ந்தேதிகளில் மாவட்ட அளவிலான வளையப்பந்து போட்டி, பவானி லட்சுமி நகரில் உள்ள மதர்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நடைபெற உள்ளது. 14, 18 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவுகளில் தனிநபர் போட்டிகள் நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் வீரர் -வீராங்கனைகள் வருகிற ஜூன் மாதம் 3-ந்தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடிக்கும் வீரர் -வீராங்கனைகளுக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என்று வளையப்பந்து கழகத்தின் ஈரோடு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story