டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை


டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை
x

வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர்

வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுக்கூடங்கள் காந்திஜெயந்தி தினமான வருகிற 2-ந் தேதியும், மிலாடி நபி தினமான வருகிற 9-ந் தேதியும் மூடிவைக்க வேண்டும்.

அன்றைய தினங்களில் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது. இந்த தினங்களில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுக்கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால் மதுக்கூடத்தின் உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். மேலும் உரிமத்தை ரத்து செய்யவும், மதுக்கூட உரிமையாளர் மீது உரிய குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story