2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை


2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
x

உள்ளாட்சி இடைத்தேர்தலை முன்னிட்டு 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுகிறது என நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் இன்று(சனிக்கிழமை) நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை வருகிற 12-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இடைத்தேர்தலையொட்டி இன்றும் மற்றும் 12-ந்தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. வாக்குமையத்திற்கு 5 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் அமைந்துள்ள வேட்டைக்காரனிருப்பு, வெள்ளப்பள்ளம், கோவில்பத்து, கொளப்பாடு, சிக்கல், வலிவலம் மற்றும் தலைஞாயிறு, கீழையூர் ஆகிய பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் 9-ந்தேதி மற்றும் 12-ந்தேதி ஆகிய 2 நாட்கள் இயங்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story