கரடிகுளம் பகுதியில் 2 நாட்கள் மின்தடை
கரடிகுளம் பகுதியில் 2 நாட்கள் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி மின்வாரிய கோட்டம் கழுகுமலை துணை மின் நிலையம் மூலம் மின் வினியோகம் செய்யப்படுகின்ற உயர் அழுத்த மின் தொடரிலுள்ள குறைந்த திறனுடைய டிரான்ஸ்பார்மரை மாற்றிவிட்டு, அதிக திறனுடைய புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணிகள் நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது.
எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சி.ஆர். காலனி அருகில் உள்ள பெரிய காலனி பகுதியிலும், நாளை மறுநாள் சி.ஆர். காலனி அருகில் உள்ள சின்ன காலனி மற்றும் கரடிகுளம் பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும் மின்தடை செய்யப்படுகிறது.
இந்த தகவலை, கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் எஸ்.முனியசாமி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story