பயிர் மதிப்பிட்டாய்வு திட்டம் குறித்த 2 நாட்கள் பயிற்சி
பொருளியல், புள்ளியியல் துறையின் மூலம் பயிர் மதிப்பிட்டாய்வு திட்டம் குறித்த 2 நாட்கள் பயிற்சி கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் 2022-23-ம் ஆண்டிற்கான பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் மூலம் பயிர் மதிப்பிட்டாய்வு திட்டம் குறித்து வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வருவாய் துறையினருக்கு 2 நாட்கள் பயிற்சி நடந்தது.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, பயிற்சியை தொடங்கி வைத்தார்.
பயிற்சியில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலை துறைகளை சேர்ந்த களப்பணியாளர்களுக்கு பயிர் அறுவடை பரிசோதனை குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.
பயிற்சியில் வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) விஸ்வநாதன், புள்ளியியல் துணை இயக்குனர் ஆறுமுகம், வேளாண்மை துணை இயக்குனர் ஆல்பர்ட் ராபின்சன், புள்ளியியல் உதவி இயக்குனர் ஸ்ரீதர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story