தாராபுரம் அருகே இருவேறு சம்பவத்தில் முதியவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
தாராபுரம் அருகே இருவேறு சம்பவத்தில் முதியவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
தாராபுரம்
தாராபுரம் அருகே இருவேறு சம்பவத்தில் முதியவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வாலிபர் தற்கொலை
தாராபுரத்தை அடுத்த திருமலைப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாயவன் மகன் மூர்த்தி (வயது 19). இவர் கம்பி வேலி அமைக்கும் தொழிலாளி. இவரது அக்கா கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரை பார்க்க மூர்த்தியின் பெற்றோர் இருவரும் கோவைக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது வீட்டில் தனிமையில் இருந்த மூர்த்தி வீட்டு முற்றத்தில் துப்பட்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவையிலிருந்து வீட்டிற்கு திரும்பி வந்த மாயவன் வீடு உள்பக்கம் தாளிடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டு ஜன்னலை திறந்து பார்த்த போது மூர்த்தி வீட்டுக்குள் தூக்குப்போட்ட நிலையில் தொங்கிக்கொண்டிருந்ததை பார்த்து மாயவன் கதறி அழுதார். இதனை கண்ட அருகில் உள்ளவர்கள் வீட்டு கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று தூக்கில் தொங்கிய மூர்த்தியை மீட்டனர். அப்போது மூர்த்தி ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. உடனடியாக அலங்கியம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மூர்த்தியின் உடலை மீட்டு ஆம்லன்ஸ் மூலம் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
முதியவர் பலி
இதுபோல் கருப்பராயன்வலசு பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (60) இவர் செலாம்பாளையம் அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே தாராபுரம்-உடுமலை சாலையை கடக்க முயன்றார். அப்போது உடுமலையில் இருந்து தாராபுரம் நோக்கி வந்த சொகுசு கார் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் வேலுசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
சம்பவம் குறித்து அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டிவந்த உடுமலையை அடுத்த போடிப்பட்டியைச் சேர்ந்த டிரைவர் மணிகண்டன் (38) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
----
Reporter : K. Palanivel Location : Tirupur - Dharapuram - Dharapuram