நரி கடித்து 2 முதியவர்கள் படுகாயம்
நரி கடித்து 2 முதியவர்கள் படுகாயம்
நாகப்பட்டினம்
வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் ஆட்டுமந்தை வைத்துள்ளனர். தற்போது சம்பா சாகுபடி என்பதால் தங்கள் வைத்திருக்கும் ஆட்டுமந்தையை வேதாரண்யத்தை அடுத்த மணியன் தீவு கடற்கரையில் செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு அங்கேயே கொட்டகை அமைத்து தங்கி வருகின்றனர். நேற்று ஆடுகளை பிடிக்க வந்த நரி அங்கு தூங்கிக்கொண்டிருந்த கருப்பம்புலத்தை சேர்ந்த மணியன் (வயது 75), காசிநாதன் ( 70) ஆகிய 2 ேபரையும் கடித்தது. இதில் படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
Related Tags :
Next Story